தேவனுடைய கண் GOD'S EYE 58-02-25 சாட்டனூகா, டென்னஸி, அமெரிக்கா 1. இப்பொழுது, சபையோர் எல்லாருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் பரிசுத்த ஆவியானவரோடு ஊழியம் செய்யும்படிக்கு கர்த்தருடைய தூதர்கள் இங்கேயிருக்கிறார்கள். 2. நான் இன்று பிற்பகலில் சங்கீதங்களின் புஸ்தகத்தை ஆய்ந்து படித்துக் கொண்டிருந்த போது, ஒரு வேதவாக்கியத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். நான் சிறிது நேரம் அதை - அந்த வசனங்களில் சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன். நான் இரண்டு வசனங்களை வாசிக்கிறேன். அது 32ம் சங்கீதம், 7வது மற்றும் 8வது வசனங்களாகும். நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;... 3. எனக்கு அது பிடிக்கும் - தேவன் தனது மறைவிடம் என்று தாவீது பேசிக் கொண்டிருக்கிறான். நமக்கு ஒரு மறைவிடம் இருக்கிறது என்பதை நான் எண்ணிப் பார்க்க எவ்வளவாய் விரும்புகிறேன், தேவனுடைய மகத்தான பிரசன்னம் தான் நம்முடைய மறைவிடமாயிருக்க முடியும், அங்கே தான் நாம் உலகத்தின் காரியங்களிலிருந்து மறைந்து கொள்ள முடிகிறது. தொல்லைகள் வரும் போது, அவரே நம்முடைய மறைவிடமாயிருக்கிறார். 8வது வசனத்தில், அவர் இவ்வாறு கூறுகிறார்: ...உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (ஆங்கில வேதாகமத்தில் வழி நடத்துவேன் - guide என்று உள்ளது - மொழிபெயர்ப்பாளர்). 4. அவர் எவ்வாறு நம்மேல் தம்முடைய கண்ணை வைத்து நம்மை வழிநடத்துகிறார் என்று தேவன் அங்கே பேசிக் கொண்டிருந்ததை நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், அவருடைய பிரசன்னம் எப்போதும் அருகிலேயே இருக்கிறது என்பதை அறியும் போது. அவர் நம்மை வழிநடத்துகிறார். அந்த வேதவாக்கியம் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுக்கு எவ்வளவு ஏற்றதாயிருக்கிறது என்பதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பரிசுத்த யோவான் 5:19ல், அவர், ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்;... குமாரனும் அந்தப்படியே செய்கிறார்’ என்று கூறும்போது. 5. யேகோவாவின் அந்த மகத்தான கண், இயேசு தம்முடைய கண்களினூடாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சீமோன் அருகில் வந்த போது, அவர் யேகோவாவின் கண்களினூடாகத் தான் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய பெயர் சீமோன் என்றும், அவர் அதை கேபா என்று மாற்றப் போவதாகவும் அவர் அவனிடம் கூறினார் (யோவான் 1:42). மேலும் அவனுடைய தகப்பன் பெயர் யோனா என்றும் அவனிடம் கூறினார். அது அப்படியே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தேவனுடைய கண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். 6. தேவனுடைய கண் தான் காலங்களினூடாகத் தீர்க்கதரிசிகளோடு இருந்து வந்தது, அந்த தேவனுடைய கண் தான் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை காலத்திற்கு முன்பாகவே காண முடிந்தது. நாத்தான்வேல் பிலிப்புவினால் அவருடைய சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டு, இயேசு அவனைப் பார்த்து, ‘இதோ, ஒரு இஸ்ரவேலன்’ என்று கூறின போது (யோவான் 1:47), அது தேவனுடைய கண்ணே தவிர வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது. 7. அவன், ‘ரபி, நீர் என்னை எப்போது அறிவீர்?’ என்று கேட்டான். 8. அவர், ‘பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழிருக்கும் போதே உன்னைக் கண்டேன்’ என்றார். அது கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த தேவனுடைய கண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். 9. பரிசுத்த யோவான் 4ல், ஐந்து புருஷர்களைக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் கண்ட போது (யோவான் 4:18), அது தேவனுடைய கண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் - அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட உடனே, வல்லமை அவரிடமிருந்து புறப்பட்ட போது (மாற்கு 5:28,30,32 லூக்கா 8:44,46), அது கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த தேவனுடைய கண்ணாக தான் இருந்தது. அவர் அந்தப் பெண்ணைக் கண்டு, அவளுடைய தொல்லை என்னவென்பதை அறியும் வரையில் அவர் தம்முடைய கூட்டத்தினரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். 10. பரிசேயர்கள் தங்கள் இருதயங்களில், ‘நீ பெயெல்செபூல்’ என்று கூறின நேரத்தில், அவர் அந்தப் பரிசேயர்களின் சிந்தனைகளை அறிந்து கொண்ட போது (மத்தேயு 12:24,25 லூக்கா 11:15), அது அவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தேவனுடைய கண்ணே அல்லாமல் வேறெதுவாகவும் இருந்திருக்க முடியாது. 11. சீஷர்கள், ‘தங்களுக்குள்ளே எவன் பெரியவன்?’ என்று கூறி தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், அவர் அந்த சீஷர்களின் சிந்தனைகளை அறிந்து கொண்டபோது (மாற்கு 9:33,34 லூக்கா 9:46,47), அவர் பார்த்துக் கொண்டிருந்தது தேவனுடைய கண்ணின் வழியாகத்தான். 12. அவர் பெதஸ்தா குளத்திற்குள் இறங்கி (went down), ஒரு தூக்குப் படுக்கையில் ஒரு மனிதன் இருப்பதைக் காணும்படி அவர் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்து, அவன் 38 வருடங்களாக அந்த நிலையிலேயே இருந்து வந்ததை அவர் அறிந்து கொண்ட போது (யோவான் 5:5,6), அவர் தேவனுடைய கண்ணின் வழியாகத்தான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். 13. கடந்த இரவு நாம் வாசித்த நம்முடைய வேத வாசிப்பில், அது என்னவொரு ஆறுதலான காரியமாய் உள்ளது, அதில் இயேசு, ‘வேதவாக்கியங்களைத் தவறிப்போகச் செய்ய முடியாது (யோவான் 10:35)’ என்று கூறினதை நாம் கண்டு கொண்டோம். 14. அதன்பிறகு இயேசு மரித்துப் போன போது, வழிநடத்த வேண்டியதாயிருந்த அந்த மகத்தான தேவனுடைய கண், அவர், ‘நான் செய்கிற காரியங்களை, நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள் (யோவான் 14:12)’ என்று வாக்குத்தத்தம் பண்ணினார். 15. கர்த்தராகிய இயேசு போன போது, அந்த வழிநடத்துகிற கண்ணும் போய் விடவில்லை. அவர் தம்முடைய சபையில் என்றென்றுமாக தொடர்ந்து இருக்க வேண்டியிருந்தது. அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, பரத்திற்கு ஏறிச்சென்று, பரிசுத்த ஆவியை திரும்பவும் அனுப்பினார், சகல சத்தியத்திற்கும் தம்முடைய ஜனங்களை வழிநடத்துகிற அந்த அதே வழிநடத்துகிற கண்ணின் வழியாகத்தான் இன்றிரவு சபையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் தான் சத்தியமாயிருக்கிறார். 16. வேதவாக்கியங்கள் தவறிப் போக முடியாது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், நம்மை வழிநடத்துகிற அந்த அதே கண்ணானது இன்றிரவும் நம்முடைய பிரசன்னத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவும் நாம் இன்றிரவு எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோம், அல்லது, நாம் இன்றிரவு அதன் பிரசன்னத்தில் இருக்கிறோம்; அது நம்மை வியாதியிலிருந்து சுகத்திற்கு வழிநடத்தும், அது நம்மை நம்முடைய உபத்திரவங்களிலிருந்து சிலுவைக்கு வழிநடத்தும், அது நம்மை துன்பங்களிலிருந்து நல்ல ஆரோக்கியத்துக்கு வழிநடத்தும், அது நம்மை ஒரு பாவமுள்ள ஜீவியத்திலிருந்து ஒரு பரிசுத்தமுள்ள, தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியத்திற்கு வழிநடத்தும். அந்த தேவனுடைய பிரசன்னம் எப்போதுமே அருகாமையில் உள்ளது! 17. இயேசு, ‘இதோ, முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்றார். நாம் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறோம். அப்போது இயேசு வலியுறுத்திக் கூறினது போல, யூதர்களுக்காக அந்த சபைக்காலம் முடிவதற்கு முன்பு அல்லது அவர்களுடைய யுகத்திற்கு (dispensation) முன்பு, அவர் தம்மைத்தாமே யூதர்களுக்கு வெளிப்படுத்தின நாட்களில் அந்த வழிநடத்துகிற கண் அவரோடு தான் இருந்தது. அவர் தேவனுடைய கண்ணின் வழியாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலமாக அவர் அதை வெளிப்படுத்தினார். 18. அவர் சமாரியர்களிடமும் அதே காரியத்தையே செய்தார். இப்பொழுது, நாம் மீதியான புறஜாதிகளைப் பெற்றிருக்கிறோம். மேலும் இன்றிரவு, தேவன் இன்னுமாக அந்த அதே கண்ணின் வழியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்னும் தேவனுடைய கிருபை மற்றும் பரிசுத்தமாக்கும் வல்லமையோடு கூட, தேவனுடைய கண்ணின் வழியாகவே நோக்கிப் பார்த்து, நம்மைக் கழுவி சுத்தப்படுத்தி, நம்மை திராட்சை கொடிகளாய், அல்லது திராட்சைக் கொடியின் கிளைகளாக உபயோகிப்பதற்காக தம்முடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கும்படியாகவும், என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்றும், என்ன சம்பவிக்கும் என்றும் காணும்படியாக இன்னும் தேவனுடைய கண்ணினூடாக நோக்கிப் பார்க்கும்படியாகவே நம்மை அழைத்திருக்கிறார். நாம் தேவனுடைய கண்ணினூடாக நோக்கிப் பார்க்கும் காலம் வரையில் நாம் அந்தகாரத்தில் நடக்க மாட்டோம். 19. தேவனுடைய கண்ணானது அவருடைய சித்தத்தையும், அவருடைய - அவருடைய ஆவியையும், அவருடைய வார்த்தையையும் பிரதிபலித்துக் காட்டுகிறது. நம்முடைய பயிற்சி எல்லாவற்றையும் கொண்டு அது என்ன நன்மையைச் செய்யும்? நம்மை ஸ்திரமாக வைக்க அங்கே ஏதோவொன்று இல்லாமலிருந்தால், நம்முடைய எல்லா போதகங்களைக் கொண்டும், நம்முடைய எல்லா வேதசாஸ்திரத்தைக் கொண்டும் அது என்ன நன்மையைச் செய்யும்? ஒரு கப்பலில் மகத்தான கப்பற்பாய்களும், மகத்தானதும் அருமையானதுமான அடைப்பான்களும், கப்பலின் மகத்தான பின்பகுதிகளும், சுற்றுப்புற இடத்தின் சூழ்நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்ட மகத்தான சிறு சிறு இடங்களும், அந்தக் கப்பலின் உள்ளே ஒரு மகத்தான திசைகாட்டியும் இருந்து, அதில் கப்பலைத் திருப்ப சுக்கான் இல்லை என்றால், அது என்ன நன்மையானதைச் செய்யும்? அதில் திசைகாட்டியோ அல்லது சுக்கானோ இல்லாதிருந்தால், என்னவாகும்? அது அப்படியே காற்றினால் இடத்திற்கு இடம் அடித்து செல்லப்படும். 20. ஆனால் தேவனிடம் சுக்கானும், திசைகாட்டியும் இரண்டுமே இருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் இன்றைக்கு எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்றும், என்ன நடக்கப் போகிறது என்பதையும் நாம் அறியும்படி அவர் செய்திருக்கிறார். அவர்... அவர், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை (எபி. 13:5)’ என்று கூறியிருக்கிறார். ஆகையால், நாம் இன்றிரவு தேவனுடைய கண்ணின் வழியாக நோக்கிப் பார்த்து, அவர் நம்மை கல்வாரிக்கு வழிநடத்திச் செல்வார் என்பதை காண்போமாக. 21. கல்வாரியில் யாவுமே செய்து முடிக்கப்பட்டு விட்டது. ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம். (ஏசாயா 53:5)’ இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்த போது, இன்றிரவு இங்கேயிருக்கும் ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்பட்டு விட்டான். இயேசு கல்வாரியில் மரித்த போது, ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும் சுகமடைந்து விட்டான். அவர் வேலையை முடித்து விட்டார். 22. தேவன் இப்பொழுது செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவெனில், வார்த்தையைப் பிரசங்கம் பண்ண ஊழியக்காரர்களை அபிஷேகிப்பதோ, அல்லது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் செய்து முடிக்கப்பட்ட கிரியைக்கு உங்களைச் சுட்டிக் காட்டும்படி சபையில் வரங்களை ஏற்படுத்துவதும் தான். நாம் ஜெபிக்கையில், தேவன் அதை இன்றிரவு அருள வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. 23. கர்த்தராகிய இயேசுவை மீண்டுமாக மரித்தோரிலிருந்து கொண்டு வந்து, அவரை உயிரோடெழுப்பி, உன்னதத்திலிருக்கிற மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் அவரை உட்கார வைத்து, எங்களுடைய அறிக்கையின் பேரில் அங்கேயிருந்து பரிந்து பேசச் செய்திருக்கிற நித்திய ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே... அவர் தமது வார்த்தையில் எங்களுக்குப் போதித்த ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் என்று கூறும்படியான அறிக்கையோடு நாங்கள் இன்றிரவு வருகிறோம். 24. அறிக்கை செய்தல் என்பது ஒரே காரியத்தையே கூறுவதாகும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அப்படியானால், இந்தக் காலத்தின் முடிவில், 1900 வருடங்களுக்குப் பிற்பாடு, அல்லது புறஜாதி யுகத்தில், அவருடைய பிரசன்னம் இங்கேயிருந்து, அது அவரை ஜீவிக்கிறவராக அறிவிக்குமானால்... தேவனாகிய கர்த்தாவே, வாரும். நாங்கள் எல்லாரும் கூறக்கூடிய எல்லா வார்த்தைகளைக் காட்டிலும் உம்மிடமிருந்து வருகிற ஒரு வார்த்தை அதிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். நீர் உமது மகத்தான வல்லமையைக் கொண்டு பேசுவதைக் காணும் போது, ஒருக்கால் இருதயங்கள் இதற்கு முன்பு ஒருபோதுமே அடையாத ஒரு நிலைக்குள் அது இருதயங்களை போகச் செய்கிறது. 25. அது வியாதியஸ்தரை சுகப்படுத்துவதற்கான ஒரு நிலைக்கு விசுவாசத்தைக் கொண்டு வந்து, பாவியினுடைய அல்லது பாவியான ஸ்திரீயினுடைய பாவங்களுக்காக மனந்திரும்புகிற பாவியின் குற்றத்தை அறிவுறுத்துகிறது. அப்படியானால், கர்த்தாவே, இன்றிரவு, நீர் எங்கள் மூலமாக பேசும்படியாக அவ்வளவு பரிபூரணமான ஒரு வழியில் எங்களுடைய சரீரங்களை உமக்கு விட்டுக் கொடுப்போமாக. இந்த ஆசீர்வாதங்களை அருளும், கர்த்தாவே. எங்களுடைய சத்தமானது இந்த ஒலிப்பெருக்கி வழியாகப் போய், அங்கே ஏதோவொன்று ஜீவிக்கிறது என்பதை அறிவிக்கிறதை உணர்ந்து கொள்கிறோம், ஏனென்றால் ஒரு சத்தத்தை உண்டாக்க அங்கே பின்னால் ஏதோவொன்று இல்லாமலிருந்தால், இந்த ஒலிப்பெருக்கி பேசாத ஊமையாகத் தான் இருக்கும். 26. ஓ தேவனே, அவ்வாறே நாங்களும் இருக்கிறோம்; ஆனால் கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் எங்களையே ஆராதனைக்காக உமக்கு விட்டுக் கொடுக்கையில், பேசும். நாங்கள் உம்முடைய பிரசன்னத்திற்காக கூப்பிடுகையில், தாழ்மையோடு, நாங்கள் எங்கள் தலையை வணங்கி, உமக்குத் துதியை ஏறெடுக்கிறோம். அதைச் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு, ஏனென்றால் நீர் அதைச் செய்வீர் என்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ளீர். நீர் அந்த அடிப்படையின் பேரில் அதைச் செய்வீர், நீர் அதைச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணின காரணத்தினாலும், வேதவாக்கியங்களை முறித்துப் போட முடியாது என்ற காரணத்தினாலும் தான். அவைகள் நிச்சயமாக நிறைவேறியாக வேண்டும். 27. ஆகையால், கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை வெளிப்படுத்துவதின் பேரில், நாங்கள் உமது ஊழியக்காரர்களாக தாழ்மையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 28. இப்பொழுது, அது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. அவர் தமது பிரசன்னத்தின் மூலமாக நம்மை ஆசீர்வதிப்பாரானால், எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போல நாங்கள் சந்தோஷமான இருதயங்களோடு இங்கிருந்து புறப்பட்டு போவோம் - அவர் தம்மைத் தாமே எங்களுக்கு வெளிப்படுத்துவாரானால், அவ்வாறு நாங்கள் புறப்பட்டுப் போவோம். 29. ஊழியக்காரர் பேசியிருக்கிறார், பாடல்கள் பாடப்பட்டுள்ளன, ஜெபம் ஏறெடுக்கப்பட்டுள்ளது, வேதவாக்கியம் பிரசங்கிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, இதுவே தேவன் பேசுவதற்கான வேளை. இங்கே யாராவது ஒருவர் அதைக் கேட்கும்படியாக இல்லை என்றால், தேவனால் நம்முடைய - வழியாக இந்த விதமாகப் பேசி, காரியங்களை நடப்பிக்க முடியாது. 30. ‘அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவரால் அநேக கிரியைகளை (அற்புதங்களைச்) செய்ய முடியவில்லை (மத்தேயு 13:58).’ எனவே, அவர் இன்றிரவு இங்கே நமது கட்டிடத்திற்குள் வரும்படியாக அவர் அவ்வளவாக நம்மை ஆசீர்வதித்து, அவர் அன்புள்ள உயிர்த்தெழுந்த இயேசு என்று தம்மைத்தாமே அறியச் செய்வாரானால், இன்றிரவு ஒருக்கால் நம்முடைய மனச்சாட்சியும் நம்முடைய உணர்வுகளும் அசைக்கப்படலாம். 31. இப்பொழுது, நாம் ஜெப வரிசையை அழைப்போம், மிக அதிகமானோர் வேண்டாம், ஆனால் வெறுமனே ஒரு சிலரை மேடைக்கு கொண்டு வருவோம். ஜெப அட்டைகள், ஜெப அட்டை ‘P’ஆக இருப்பதாக அவர்கள் கூறினார்கள் என்று நம்புகிறேன், அவைகள் இன்றிரவில் விநியோகிக்கப்பட்டுள்ளன, அது ‘பவுலில்’("Paul") உள்ளதைப் போல இருக்கிறது. கடந்த இரவில், நாம் அவைகளில் ஒரு பிரிவை எடுத்துக் கொண்டோம்; எனவே இன்றிரவில் நான் ஐம்பது முதல் ஏதோவொன்று வரை இருந்தது என்று நம்புகிறேன், கடந்த இரவில் 75 அல்லது ஏதோவொன்றை எடுத்துக் கொண்டோம். 32. எனவே, நாம் துவங்கி, அப்படியே ஒரு சிலவற்றை எடுத்துக் கொள்வோம், நேரம் போய்க் கொண்டிருக்கிறது, அது நம்மிடமிருந்து வேகமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாம் துவங்கலாம், நாம் 85லிருந்து ஆரம்பித்து, நூறு வரையில் (அழைக்கலாம்), யாராகிலும் ஒருவரை இங்கே மேலே அழைக்கலாம். ஜெப அட்டை P-85யை வைத்திருக்கிறவர் யார்? நீங்கள் உங்கள் கரத்தை அப்படியே உயர்த்தினால், நீங்கள் இங்கேயிருக்கிறீர்கள் என்பதை எங்களால் காண முடியும்? ஒருக்கால் நான் தவறான இடத்திலிருந்து அழைத்திருக்கலாம். நான்... என்ன கூறினேன்? P-85? ஓ, அந்த சீமாட்டி இங்கேயிருக்கிறார்கள், சரி, சீமாட்டியே. இங்கே கீழே வாருங்கள். 33. எண்பத்தாறு, உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை P-86. அந்த சீமாட்டி... ஜெப அட்டைகளைப் பெற்றிருக்கிற ஒவ்வொருவரும் எழும்ப முடியாமலோ அல்லது ஏதோவொன்றாகவோ, அல்லது உங்கள் கரங்களை அசைக்க முடியாமலோ இருக்கிறவர்களைப் பாருங்கள், அல்லது நீங்கள்... உங்கள் பக்கத்தில் இருக்கிறவர்களின் ஜெப அட்டைகளைப் பாருங்கள். அவர்கள் ஒருக்கால் செவிடாகவோ, ஊமையாகவோ இருக்கலாம். 34. எண்பத்தைந்து, 86, 87. ஜெப அட்டை 87, மேலே பால்கனியில் இருக்கிறார். அவர்கள் அப்படியே ஜெப அட்டைகளை கட்டிடம் முழுவதும் விநியோகித்திருக்கிறார்கள். பையன்கள் அவைகளைக் கொடுத்திருக்கிறார்கள். 87, 88, ஓ... சரி. 88, 89. ஜெப அட்டை எண் P-89. அங்கே அந்த சீமாட்டி இருக்கிறார்கள். அவளுக்கு உதவி செய்வதற்காக உங்களுக்கு நன்றி, சீமாட்டியே. அவள் ஒருக்கால் செவிடாக இருக்கலாம். 89, 90. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? நான் அதைக் காண முடியுமா, யாரோ ஒருவரைக் காண முடியுமா? ஜெப அட்டை P-90, அந்த சீமாட்டி... சரி. 35. தொண்ணுற்றொன்று. ஜெப அட்டை எண் P-91. 92, 93, 94, 94. சரி, 95, 95, ஜெப அட்டை எண் P-95. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? வரிசையில். 96. பாருங்கள், அது ஒருக்கால் யாரோ ஒருவராக இருக்கலாம்... இப்பொழுது, இங்கே மேலே வருவது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்பதற்கு அர்த்தமல்ல. எந்தவிதத்திலும் அப்படி இல்லவேயில்லை. நீங்கள் இங்கேயிருந்து உங்களால் சுகமடைய முடியும் என்பது போலவே நீங்கள் உங்களுடைய இருக்கையில் இருந்தவாறும் சுகமடைய முடியும். 36. தொண்ணுற்றாறு, 97, 98, 99, 100. இப்பொழுது, நம்மால் இவர்களை நேரத்தோடு முன்பாக அழைத்து வரக் கூடுமானால், நாம் பின்னாலுள்ள வேறு எங்காகிலுமிருந்து துவங்கி, அவர்களை அப்படியே தொடர்ந்து மேலே அழைத்து வரலாம். 37. ஆனால் இப்பொழுது, இங்கே மேலே வருவது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்பதற்கு அர்த்தமல்ல... நீங்கள் இங்கேயிருந்து உங்களால் சுகமடைய முடியும் என்பது போலவே நீங்கள் அங்கே வெளியே இருந்தவாறும் சுகமடைய முடியும். தேவன் உங்களுடைய விசுவாசத்தின் தகுதிகளின் பேரில் தான் உங்களை சுகமாக்குவார், அதன் பேரில் மட்டுமே அவர் உங்களைச் சுகப்படுத்துவார். அப்படியே உங்கள் விசுவாசத்தின்படியே... 38. இப்பொழுது, அங்கே வெளியேயிருக்கிற எத்தனை பேரிடம் ஜெப அட்டை இல்லாமலிருந்து தேவன் உங்களை சுகமாக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் மேடையின் மேல் அழைக்கப்படாமல், ஆனால் தேவன் உங்களை சுகமாக்க விரும்பினால், அப்படியே உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிடத்தில் எங்காவது இருக்கிறீர்களா. ஆகையால் தான் அவர்களை மேலே வரிசையில் கொண்டு வர, ஜெப அட்டைகளை விநியோகிக்க வேண்டியதாய் உள்ளது. 39. சரி. நீங்கள் இதைச் செய்யுங்கள். நீங்கள் அப்படியே கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார் (எபி. 4:15)’ என்று வேதம் கூறுகிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? வேதாகமம் அதைப் போதிக்கிறது. 40. நல்லது, ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அப்பொழுது அவர், ‘நான் பலவீனமடைந்து விட்டேன்’ என்றார். அவள் அந்தக் கூட்டத்திற்குள் எங்கோ ஓரிடத்திற்கு விலகிப் போய் விட்டாள். இயேசு தாம் பலவீனமடைந்ததாகவும், வல்லமை அவரை விட்டுப் புறப்பட்டுப் போனதாகவும் கூறினார். அதன்பிறகு அவர் - அவர் அந்த ஸ்திரீயைக் கண்டுபிடிக்கும் வரையில், சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தார். எத்தனை பேர் எப்பொழுதாவது அந்த சம்பவத்தை வாசித்திருக்கிறீர்கள்? 41. நல்லது, அப்படியானால், வேதாகமம் எபிரெயர் 13:8ல், ‘இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ என்று கூறுகிறதா? வேதவாக்கியம், ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இன்னும் இருக்கிறார்’ என்று கூறுகிறது. அப்படியானால், நீங்கள் இன்றிரவு, நோக்கிப் பாருங்கள், ஒரு பிரசங்கியாரை அல்ல, உங்களுடைய சகோதர சகோதரிகளில் ஒருவரை அல்ல, ஆனால் கல்வாரியை நோக்கிப் பாருங்கள் ... கொண்டிருக்கிற கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். சரியாகக் கல்வாரியை அல்ல. கல்வாரியில் தான் கிரயம் செலுத்தப்பட்டது, ஆனால் கிறிஸ்து இன்றிரவு கல்வாரியை விட்டு தூரமாய் சென்று விட்டார். அவர் தேவனுடைய சமுகத்தில் இருந்து, நம்முடைய அறிக்கையின்பேரில் பரிந்து பேசும்படியாக என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இன்றிரவு கிறிஸ்துவின் ஆவி இங்கே நமது மத்தியில் இருக்கிறது. 42. அவர்கள் ஜனங்களை வரிசையில் கொண்டு வருகையில், கவனியுங்கள். கிறிஸ்து இங்கே பூமியில் இருந்த போது, ‘நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்குப் போகிறேன் (யோவான் 16:28)’ என்றார். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்து வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரர்களோடு இருந்தார் என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இஸ்ரவேல் பத்திரர்களை வழிநடத்தின அந்த அக்கினிஸ்தம்பம் கிறிஸ்து தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? எரிகிற முட்செடியில் இருந்தது உடன்படிக்கையின் தூதன் தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அவ்வாறு இருந்ததாக அவரே கூறினார். 43. ‘ஆபிரகாமுக்கு முன்னமே நான் இருக்கிறேன் (I AM).’ எரிகிற முட்செடியில் மோசேயோடு பேசினவர் நானே (I AM). அதன்பிறகு, கிறிஸ்துவாகிய அவருடைய குமாரனின் சரீரத்திற்குள் இருந்த பாவத்தை அகற்றிப் போட தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கினார். 44. அவர் கிறிஸ்து வழியாகத் தம்மை வெளிப்படுத்தினார். கிறிஸ்து, ‘நான் தேவனிடத்திலிருந்து, (அக்கினிஸ்தம்பத்திலிருந்து) வந்தேன், நான் அதே நிலைக்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்றார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு, பவுல் தமஸ்குவுக்குப் போகும் பாதையில் அவரை சந்தித்தான், அவர் மீண்டுமாக ஒளிக்குள் திரும்பினார். அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? 45. நல்லது, எந்த ஆவியும் தானாகவே சாட்சி கொடுக்கும். எந்த ஜீவனும் சாட்சி கொடுக்கும். ஒரு... னுடைய ஜீவனானது. நான் முன்பே கூறியிருக்கிறபடி, ஒரு பூசணிக்காய் கொடியின் ஜீவனானது ஜீவனைப் பிறப்பிக்கும் - பூசணிக்காய்களையே பிறப்பிக்கும். திராட்சைச் செடி திராட்சை பழங்களையே பிறப்பிக்கும். 46. இயேசு, ‘நானே திராட்சச்செடி; நீங்கள் கொடிகள்’ என்று கூறினார். உங்களுக்குள் இருக்கிற ஜீவனானது... சட்டத்தை மீறி குற்றம் புரியும் ஒரு குற்றவாளியின் ஆவி எனக்குள் இருந்தது என்று நான் உங்களிடம் கூறியிருந்தால், நான் பெரிய துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, ஆபத்தான ஒருவனாக இருந்திருப்பேன் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஒரு ஓவியனின் ஆவியானது எனக்குள் இருந்தது என்று நான் உங்களிடம் கூறியிருந்தால், ஓவியன் வரைகிற படங்களை என்னால் வரைந்திருக்க முடிந்திருக்கும். 47. நமக்குள் கிறிஸ்துவின் ஆவி இருக்கிறது என்று நாம் கூறினால், கிறிஸ்து செய்த காரியங்களையே நாமும் செய்வோம். 48. இங்கேயிருக்கும் படத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், என்னுடைய படத்தை அல்ல, எனக்கு அதனோடு எந்த சம்பந்தமுமே கிடையாது. அது கிறிஸ்து தம்மைத்தாமே அவருடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்துவதாகும். அப்படியானால், இங்கேயிருக்கும் இது ஜெர்மனியிலும், வித்தியாசமான இடங்களிலும், மகத்தான மனிதர்கள் முன்னிலையிலும் புகைப்படமாக எடுக்கப்பட்டிருக்குமானால்... அமெரிக்க புலன் விசாரணைக்குழு (FBI - Federal Bureau of Investigation) கூட இந்தப் படத்தை பரிசோதித்துப் பார்த்துள்ளது: அவர் தான் ஜார்ஜ் J. லேஸி. 49. அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் தான் என்று நிரூபிக்கப்பட்டு, அது அதே அக்கினிஸ்தம்பம் போல் தோற்றமளிக்குமானால், அது கிறிஸ்து இன்னுமாக தமது சபையோடு இருந்ததாகும். ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (எபிரெயர் 13:5)’ அப்படியானால், ‘நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்.’ அது கிறிஸ்துவின் ஆவியாக இருக்குமானால், அவர் செய்த அதே வகையான கிரியைகளை அதுவும் செய்யும். அது கிறிஸ்துவின் ஆவியாக இல்லை என்றால், அது அந்தக் கிரியைகளைச் செய்யாது. இதன் பேரில், நாம்... என்று கூறுவோமாக. 50. ஜெபிக்க வேண்டிய சீமாட்டி நீங்கள் தானா? உங்களை எனக்குத் தெரியாத எத்தனை பேர்கள் கட்டிடத்தில் இருக்கிறீர்கள், உங்களை அறியும்படி நான் விரும்புகிறேன், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நாங்கள் உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். கட்டிடத்தில் இருக்கிற யாவரையும் எனக்குத் தெரியாது, ஜெப வரிசையில் உள்ளவர்களையும் கூட நான் அறியேன். 51. இதோ வேதாகமத்தின் ஒரு காட்சி உள்ளது. இப்பொழுது, வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேதாகமத்தை எழுதின ஆவியானவர் இன்னும் ஜீவிக்கிறார். அவர் எந்த வித்தியாசத்தையும் மேலானதாகக் கொண்டிருப்பதில்லை. அவர் அப்போது அறிந்திருந்ததைக் காட்டிலும் இன்று அதிகமாக எதையும் அறிந்து கொள்வதில்லை, ஏனென்றால் அவர் துவக்க முதலே முடிவற்றவராய் இருக்கிறார். 52. தேவன் ஆதியில் எதையாவது செய்து, மீண்டும் அதே சூழ்நிலை எழும்புமானால், அப்போது அவர் ஆதியில் செய்ததைக் காட்டிலும் வித்தியாசமாக நடந்து கொள்வாரானால், அவர் நடந்து கொண்ட போது, தவறாகத் தான் நடந்து கொண்டார். அவர் தொடர்ந்து அதே விதமாகவே இருந்தாக வேண்டும். நாம் செய்வதைப் போன்று அவர் புத்திசாலியாக ஆவதில்லை, ஏனென்றால் அவர்-அவர் துவக்க முதலே முடிவற்றவராய் இருந்தார். 53. வேதாகமம் இரண்டுமே ஒரு சரித்திரமாயுள்ளது, அது ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறது, அது ஒரு காதல் கதை, அது கிறிஸ்துவை நமக்கு சித்தரிக்கிறது. அப்படியானால், வேதாகமத்தின் கிறிஸ்து மரிக்காமல், உயிரோடு இருப்பாரென்றால், அவர் வேதாகமத்தில் செய்தது போன்று அப்படியே தம்மைத்தாமே வெளிப்படுத்தியாக வேண்டும். 54. இப்பொழுது, இதோ ஒரு பெண்மணி இருக்கிறார்கள். மிகவும் நேசமுள்ள, அன்பிற்குரிவர்கள்... அவர்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்களுக்கு ஏறக்குறைய என்னுடைய தாயாரின் வயது இருப்பதாகத் தோன்றுகிறது. நான் அவர்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களாயிருக்கிறோம். இங்கே -ன் ஒரு காட்சி இருக்கிறது. ஒரு வேதாகம காட்சி, பரிசுத்த யோவான் 4ம் அதிகாரத்தில் ஒரு மனிதரும் ஒரு ஸ்திரீயும் இருந்தது போல... இயேசு கிணற்றண்டையில் இருந்த அந்தப் பெண்மணியோடு இருந்து, அவர் அவளிடம் பேசினார்... 55. இப்பொழுது, கவனியுங்கள், அவர் எரிகோவுக்குப் போகும் தம்முடைய பாதையில் இருந்தார், ஆனால் சமாரியா வழியாக போகும்படியாக அவசியம் ஏற்பட்டது. ஏன்? அவர் அப்படியே பரிசுத்த யோவான் 5ல், ‘பிதா எனக்கு முதலில் காண்பிக்கும் வரையில் நான் எதையும் செய்வதில்லை’ என்று கூறினார். நீங்கள் அந்த வேதவாக்கியத்தை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், தேவன் முதலில் அவருக்குக் காண்பிக்காமல் அவர் ஒருபோதும் ஒரு அற்புதமும் செய்யவில்லை. 56. ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார், குமாரனும் அந்தப்படியே செய்கிறார்,’ பாருங்கள்? 57. என்னுடைய அன்பும், நேசமுமுள்ள சகோதரியே, நீ சுகமடையும்படியாக நான் உனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு காரியம் அங்கே இருக்குமானால், அல்லது - அல்லது உன்னுடைய கோளாறு என்னவாக இருந்தாலும்... நீ ஒருக்கால் வியாதிப்பட்டவளாக கூட இல்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியாது. நான் உன்னை ஒருபோதும் சந்தித்ததேயில்லை. நான் உனக்கு உதவி செய்யக்கூடிய ஏதாவது அங்கே இருக்குமானால்... அது பண விவகாரங்களாக இருக்குமானால், நீ கொண்டிருக்கும்படி, நான் உனக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுக்கலாம், ஏனென்றால் கொஞ்சம் பணம் தான் இருக்கிறதே ஒழிய வேறெதுவும் என்னிடம் இல்லை. அது குடும்பப் பிரச்சனையாக இருந்தால், நான் உன்னுடைய அன்பார்ந்தவரிடம் பேச முயற்சிப்பேன். என்னால் -என்னால் கூடுமான எதையும் செய்வேன். 58. ஆனால், இப்பொழுது, சுகமளித்தலாக... அது சுகமளித்தலாக இருக்குமானால், அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது, நீங்கள் கிறிஸ்துவிடமிருந்து சுகமளித்தலைத் தேடிக் கொண்டிருப்பீர்களானால். அதைச் செய்யும்படியாக எனக்குள் அது வைக்கப்படவில்லை அல்லது வேறு யாரிடமும் அது கிடையாது. அது தேவனுக்குள் தான் வைக்கப்பட்டிருக்கிறது. 59. தேவன் தமது வார்த்தையின்படி ஏற்கனவே அதைச் செய்திருக்கிறார். அப்படியானால், ஊழியக்காரர்களாக, நாம் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், அதைச் செய்ய போதுமான மனிதர்களில் சிலர் வேதவாக்கியத்தின் வழியாக அதை விளக்கிக் கூறலாம். அதுதான் ஆரம்பிக்க வேண்டிய வழி. அது நானாகவோ அல்லது நீங்களாகவோ இருக்குமானால், அது அதை முடிவுக்குக் கொண்டு வரும். ஆனால் தேவன் மிகவும் நல்லவராயிருக்கிறார். அவர் ஒவ்வொரு சிறு கல்லையும் அசைக்கிறார், அப்போது ஒவ்வொருவரும்... அவர் ஜனங்களை நேசிக்கிறார், அவரை விசுவாசிக்கும்படி அவர்களைக் கொண்டு வருவதற்கும், அவரிடத்தில் விசுவாசம் வைக்கவும் அவர் வேறு ஏதோவொன்றைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 60. இப்பொழுது, நீங்கள் இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று தேவனாகிய கர்த்தர் எனக்கு வெளிப்படுத்திக் கொடுப்பாரென்றால், கிணற்றண்டையில் இருந்த சமாரிய ஸ்திரீயிடம் அவர் செய்தது போலவே... அவர் அவளுடைய பிரச்சனையைக் கண்டுபிடித்தார். அவளுடைய பிரச்சனை எங்கே இருந்தது என்பதை அவர் அவளிடம் கூறின உடனே, அவள், ‘ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது, இந்தக் காரியங்களைச் செய்வார் என்றும், இந்தக் காரியங்களை எங்களுக்குக் காண்பிப்பார் என்றும் நாங்கள் அறிவோம்’ என்று கூறினாள். 61. அவர்-அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவள் அவரை விசுவாசித்தாள், ஆனால் இயேசுவோ, ‘உன்னுடனே பேசுகிற நானே அவர்’ என்றார். 62. அவள் ஊருக்குள்ளே ஓடிச்சென்று, ‘நான் செய்த காரியங்களை எனக்குக் கூறின ஒரு மனுஷனை வந்து பாருங்கள். இவர் மேசியா தானா?’ என்று கூறினாள். அதுதான் அப்போது மேசியாவின் அடையாளமாக இருந்து, அவர் இன்னுமாக நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அது இப்பொழுதும் மேசியாவின் அடையாளமாக இருக்கிறது. 63. ...கொண்டு வந்ததன் மூலமாக அவர் அதை யூத குல ஜனங்களுக்கு அறிவித்த போதும் அவர் அதே காரியத்தையே செய்தார். பிலிப்பு சென்று அந்த மலையைச் சுற்றிலும் முப்பது மைல்கள் தூரத்தில் இருந்த நாத்தான்வேலைக் கண்டுபிடித்து, அவனைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான். அவன் எங்கிருந்தான் என்பதையும், அவன் என்ன செய்திருந்தான் என்பதையும் தாம் அறிந்திருந்ததாக இயேசு அவனிடம் கூறினார். 64. பரிசேயர்கள் அதைக் குறித்து என்ன நினைத்தனர்? அது பிசாசு என்று அவர்கள் கூறினார்கள். இயேசு, ‘நான் உங்களை மன்னித்து விடுவேன், ஆனால் அதே காரித்தைச் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் வரும் போது, அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் மன்னிக்கப்படாது (மத்தேயு 12:32, மாற்கு 3:29, லூக்கா 12:10)’ என்று கூறினார். 65. இப்பொழுது, நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். சரியாக இப்பொழுதே, சுவிசேஷமானது சரியா தவறா என்று நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. கிறிஸ்து அவ்விதமான ஒரு வாக்குத்தத்தம் பண்ணியிருப்பாரானால், அவர் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். 66. நாம் சேவிக்கிற அந்த மார்க்கத்தை அறிவதென்பது என்னவொரு ஆறுதலாய் உள்ளது, முழு உலகத்தாரின் தேவன் ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்கக்கூடியதாய் முழு உலகத்திலும் இருக்கிற ஒரே மார்க்கம் தேவன் தான். நான் இருபது முப்பது வித்தியாசமான மதத்தைச் சேர்ந்த ஜனங்களுக்கு முன்பாக நிற்கும்படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது, வித்தியாசமான தேவர்களை நம்புகிற அந்த வித்தியாசமான மதத்தைச் சேர்ந்த ஜனங்களும், முகமதியர்களும், புத்தர்களும், சீக்கியர்களும், ஜெயினர்களும், மற்றும் ஓ, எல்லா வித்தியாசமான வகைப்பட்டவர்களும், தங்கள் கரங்களில் விக்கிரகங்களை வைத்திருந்த கம்பள சுதேசிகளும் (blanket natives), போன்றோர் முன்பாக நிற்கும்படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. 67. ஆனால் அங்கே எவரிடத்திலும் எதுவுமேயில்லை... மனிதன் பெரிய வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கிறான், ஆனால் ஒரு மனிதர் மட்டுமே, ‘எனது ஜீவனை கொடுக்கவும், அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு (யோவான் 10:17,18)’ என்று கூறினார். அவர் அதைச் செய்தார். 1900 வருடங்கள் - அவருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் - அவர் இன்னும் ஜீவிக்கிறார். அவர் மரிக்கவில்லை. 68. நீங்கள் காண்கிறபடி, எங்கேயோ தூரத்திலுள்ள ஏதோவொரு இருளான மூலையில் அல்ல. இங்கே இந்த வெளிச்சத்தின் கீழே, நானும் இந்த பெண்மணியும் முதல் முறையாக சந்திக்கிறோம், கிறிஸ்து இன்றிரவும் ஜீவிக்கிறார் என்று நான் உரிமை போருகிறேன். 69. நீங்கள் மாத்திரம் ஆவியானவருக்கு உங்களை விட்டுக்கொடுக்கக் கூடுமானால், அவர் உங்கள் மூலமாகப் பேசுவார். இப்பொழுது, அது இயற்கைக்கு மேம்பட்டதாக இருந்தாக வேண்டும். நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. நீங்கள் பரிசேயர்களின் பட்சம் சேர்ந்திருப்பீர்களானால், நீங்கள் அவர்களுடைய வெகுமதியைப் பெற்றுக்கொள்வீர்கள். அது பிசாசென்றும், குறிசொல்பவன் என்றும் அல்லது ஏதோவொன்று என்றும், பெயல்செபூல் என்றும், பிசாசுகளின் தலைவன் என்றும் அவர்கள் கூறினார்கள், எந்த இருளின் மாயவித்தைகளும் குறிசொல்வதும் பிசாசினுடையதாய் இருக்கிறது என்பதை யாருமே அறிவார்கள். நிச்சயமாக. அது பிசாசு தாறுமாறாக்கின ஏதோவொன்றாக உள்ளது. 70. கிறிஸ்துவிடமிருந்து வருகிறது மாத்திரமே உண்மையாகவே தேவனுடைய ஆவியாகும். எங்கள் சகோதரியே, கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. அவர் அருளுவாராக... அவர் உங்களிடம் கூறுவாரானால்... இப்பொழுது, நான் அப்படியே உங்கள் மேல் கரங்களை வைத்து, ‘போங்கள், நீங்கள் சுகமாகி விட்டீர்கள்’ என்று கூறுவேனானால், நீங்கள் அதைச் சந்தேகிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய ஜீவியத்தில் இருந்து வருகிற ஏதோவொன்றை அவர் உங்களிடம் கூறுவாரானால், அது- என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நாத்தான்வேலைப் போன்று, உங்கள் ஜீவியம் முழுவதும் நீங்கள் செய்திருக்கிற ஏதோவொன்றை உங்களிடம் கூறுவாரானால், அல்லது அந்த ஸ்திரீயைப் போன்று ஏதோவொன்று, அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். அது உண்மையா இல்லையா என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அப்படியானால், நீங்கள் தீர்ப்பு செய்பவராக இருக்கிறீர்கள். 71. நீங்கள் தேவனோடு உத்தமமாயிருப்பீர்களா, நீங்கள் அவ்வாறு இருப்பீர்களா? நானும் தேவனோடு உத்தமமாயிருப்பேன். ஜனங்களாகிய நீங்கள் தேவனோடு உத்தமமாயிருந்து, ‘அவர் அதைச் செய்வாரென்றால், அது ஒவ்வொரு சந்தேகத்தையும் என்னை விட்டு அகற்றி விடும். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நான் விசுவாசிப்பேன்’ என்று கூறுவீர்களா? உங்களுடைய கரங்களை மேலே உயர்த்தி, நீங்கள் அவருக்கு வாக்குக் கொடுப்பீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அதை அருவாராக, அதுவே என்னுடைய ஜெபமாயுள்ளது. 72. இந்த சீமாட்டி கீல்வாதத்தினால் அவதிப்படுகிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் ஜெபித்துக் கொள்ளப்பட விரும்புகிறார்கள். அதுதான் அப்படியே உண்மையாயுள்ளது. அது உண்மையாயிருக்குமானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அவர்களிடம் அப்படியே இன்னும் கொஞ்சம் பேசுகிறேன். நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் அதை யூகித்திருக்கக் கூடும்’ என்று கூறினீர்கள். பாருங்கள், இப்பொழுது உங்களால் உங்களுடைய எண்ணங்களை மறைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் அவைகளில் சிக்கிக் கொண்டு விடுகிறீர்கள். கர்த்தர் அவைகளை வெளிப்படுத்துகிறார். 73. சாட்டனூகா ஜனங்களே, எனக்குக் கவனம் செலுத்துங்கள். இங்கே புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள ஒளியின் தூதனானவர் நான் இப்பொழுது நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி தூரத்திற்குள் தான் இருக்கிறார். அது ‘கர்த்தர் உரைக்கிறதாவது.’ நியாயத்தீர்ப்பின் நாளிலே அது நிரூபிக்கப்படும், அப்போது நீங்கள் கண்டு கொள்வீர்கள். அவர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அதோ அங்கே பின்னால் இருந்தார் என்பதை அவருடைய பிரசன்னம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால், நியாயத்தீர்ப்பின் நாளிலே, நீங்கள் அதைக் காண்பீர்கள். 74. ஆமாம், இந்த சீமாட்டி ஏதோவொன்றை விட்டு நகர முயற்சி செய்வதை நான் காண்கிறேன். அது ஒரு நாற்காலி. அவர்கள் எழும்புவதற்கு முயற்சிக்கிறார்கள், அதன்பிறகு திரும்பவுமாக கீழே உட்காருகிறார்கள். அவர்கள் மீண்டும் எழும்புகிறார்கள். அவர்கள் ஒரு அறைக்குள் இருக்கிறார்கள். அது ஒரு அசைந்தாடும் நாற்காலியைப் போல, அதன் மேல் ஒரு கையைக் கொண்டிருப்பது போல இருக்கும் ஒரு சிறிய நாற்காலி. அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியே போக முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒரு ஜன்னலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் முதுகைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது முதுகுத்தண்டிலுள்ள கீல்வாதமாகும் (arthritis). அது அவர்களுடைய முதுகில் இருக்கிறது. அது முற்றிலும் சரியே. 75. நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காகவும் கூட ஜெபிக்கப்பட விரும்புகிறீர்கள். உது உங்களுடைய மகள். உங்கள் மகளுக்கு என்ன கோளாறு உள்ளது என்று தேவனால் எனக்கு வெளிப்படுத்தக் கூடுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவளுக்குக் கடுமையான ஒற்றைத் தலைவலி இருக்கிறது. அது ‘கர்த்தர் உரைக்கிறதாவது.’ 76. அங்கே உங்களுடைய இருதயத்தில் இன்னும் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கிற ஏதோவொன்று உள்ளது. அது வேறு யாரோ ஒருவருக்காகவும் கூட ஜெபிக்க வேண்டிய ஜெபமாய் உள்ளது. அதுதான் உங்களுடைய மகன். அங்கே அவன் மேல் ஒரு கறுத்த நிழல் உள்ளது. நீங்கள் அவனுடைய ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவன் ஒரு பாவியாக இருக்கிறான். அது ‘கர்த்தர் உரைக்கிறதாவது’. அது உண்மை. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... ஏதோவொன்று பேசிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சீமாட்டியே, அது நானல்ல. நீங்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டீர்கள். இப்பொழுது, சிறிது நேரத்திற்கு முன்பாக உங்கள் மேல் இருந்த அந்த மன உணர்ச்சி மறைந்து போய் விட்டது, இல்லையா? உங்களுக்கும் எனக்கும் இடையே ஒளியாகிய அந்த தூதன் நின்று கொண்டிருந்தார். அது இப்பொழுது உங்களை விட்டுப் போய் விட்டது. நீங்கள் கேட்டுக் கொண்ட யாவற்றையும் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசித்துக் கொண்டே போங்கள், நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் வேயில் அவர்களே, நீங்கள் இங்கே வருவீர்களா... பில்லி எங்கே? அல்லது யாராவது இங்கே இருக்கிறீர்களா, சரி... 77. எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே? இப்பொழுது, இந்த சீமாட்டியிடம் (பேசுவதற்கு) முன்பு, உங்களில் எத்தனை பேர் இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது, ஜெப அட்டை இல்லாமல் அங்கே வெளியே இருக்கிற நீங்களும், இங்கு மேலே பால்கனிகளில் இருக்கிறவர்களும், நீங்கள் எங்கிருந்தாலும், அப்படியே நோக்கிப் பார்த்து, ‘கர்த்தராகிய இயேசுவே, இது சத்தியமாக இருக்குமானால், இங்கே வெளியே இருக்கிற என்னிடம் அம்மனிதர் பேசட்டும். அவர்... நீர்-நீர் மாறாதவராயிருக்கிறீர்... அது அந்த மனிதன் அல்லவென்று எனக்கு-எனக்குத் தெரியும், ஏனென்றால் அவருக்கு என்னைத் தெரியாது. நான் வெறுமனே இங்கே இந்தக் கூட்டத்தினரில் (சபையில்) உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு, நீர் எங்கள் பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறீர் என்று அவர் எங்களிடம் கூறினார். அவர் எங்களிடத்தில் பேச நீர் அனுமதியும், அப்படியானால் அது ஒவ்வொரு சந்தேகத்தையும் என்னை விட்டு எடுத்துப் போட்டு விடும். நான் உம்மை விசுவாசிப்பேன், நீர்-நீர் என்னை சுகமாக்க விரும்புகிற தேவனாகிய கர்த்தர், என்னைச் சுகப்படுத்தும்’ என்று கூறுங்கள். 78. நீங்கள் அதைச் செய்து, என்ன சம்பவிக்கிறது என்று கண்டு கொள்ளுங்கள். வெளியே சபையோரிடத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே, நிச்சயமாகவே... அவர்கள் சிந்தைகளில் ஓடுகிற ஏதோவொன்றைக் குறித்த எண்ணங்களை சிந்திக்கும் ஜனங்களின் நிமித்தமாக நான் இதைக் கூறுகிறேன், அவர்கள் வியப்படைந்து கொண்டிருக்கிறார்கள். வியப்படைய வேண்டாம்; அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். அவர், ‘உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கைகூடும்’ என்று கூறியிருக்கிறார். எல்லாமே சாத்தியம் தான்; அது அற்புதம் அல்லவா? எல்லாம் கைகூடும். 79. நாமும் கூட ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன், அப்படித்தானே சகோதரியே? ஒரு நேர்மையான பெண்மணியைப் போன்று நீங்கள் எனக்கு காணப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்கள் ஆவி வரவேற்கிறது. சீமாட்டியே, நீங்கள் ஒரு உணர்வுக்குள்ளாகி இருக்கிறீர்கள், உங்கள் சகோதரனின் முன்னிலையில், அந்தவிதமான ஒரு உணர்வை நீங்கள் உணரச் செய்யாது. 80. இப்பொழுது, நீங்கள் என்னிடத்திலும், சபையோரிடத்திலும் நேர்மையாக இருக்கிறீர்கள். சற்று முன்பு, ஏதோவொன்று சம்பவிக்கத் துவங்கினது. அது என்ன? இங்கே நீங்கள் காணும் இந்தப் படம் அந்த தூதனுடைய படம் தான். அதுதான் சற்று முன்பு உங்கள் மேல் வந்தது. 81. இப்பொழுது, எனக்கு, நீங்கள் அப்படியே மிகவும் வெளிச்சமாக காணப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் என்னை விட்டு அகன்று போய்க் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் கீல்வாதத்திற்காகவும் கூட ஜெபித்துக் கொணடிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் கணவனாருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவரும் அதே காரியத்தைக் கொண்டிருக்கிறார். அது முற்றிலும் சரியே. 82. ஜெபித்துக் கொள்வதற்கான உங்கள் ஜெப அட்டவணையில் இன்னும் ஏதோவொன்று இருக்கிறது, அது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நீங்கள் முழங்கால்படியிட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இரண்டு மனிதர்கள் எழும்புவதை நான் காண்கிறேன். அவர்கள் இருவருமே பாவிகளாக நிழலிடப்பட்டுள்ளனர். அது உங்கள் சகோதரர்கள். நீங்கள் அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது, ‘கர்த்தர் உரைக்கிறதாவது.’ 83. அவருடைய பிரசன்னம் இங்கேயிருக்கிறது என்று இப்பொழுது உங்களால் விசுவாசிக்கக் கூடுமா? அப்படியானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய சகோதரியே, நீங்கள் போகலாம், விடுதலையாக வேண்டுமென்று உங்களுக்கு அவசியமாயிருக்கிற யாவற்றிலுமிருந்தும் தேவன் உங்களை விடுவிக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நான் ஜெபிக்கிறேன். உங்களுக்கு விருப்பமானால், தயவு செய்து மிகவும் பயபக்தியாயிருங்கள். 84. அவிசுவாசம் என்பது அங்கேயிருக்கிற மிகவும் பயங்கரமான காரியங்களில் ஒன்றாகும். நான் எந்த வழியிலும் போகட்டும், ஆனால் நான் ஒரு பக்தியான அவிசுவாசியாக இருக்க வேண்டாம். அங்கேயிருக்கிற ஒரே பாவம் அவிசுவாசம் மட்டுமே. புகைப்பிடித்தல், மது அருந்துதல், விபச்சாரம் செய்தல், சபித்தல், பொய்யாணையிடுதல், அவைகள் பாவமல்ல. அவைகள் அவிசுவாசத்தின் தன்மைகள் ஆகும். ‘விசுவாசியாதவனோ, ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)’ 85. பக்தியுள்ளவர்கள் என்றும், சபைக்குப்போகிறவர்கள் என்றும், தெய்வ பக்தியுள்ளவர்கள் என்றும் உரிமைகோரும் ஜனங்கள் இன்னுமாக உயர்தர அவிசுவாசிகளாகவும், பாவிகளாகவும் இருக்கிறார்கள். இயேசு, ‘நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் (யோவான் 8:44)’ என்றார். இருப்பினும் அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு தெய்வ பக்தியுள்ளவர்களாகவும், கடவுட்பற்று மிக்கவர்களாகவும் இருந்தனர். அங்கே கையாளக் கூடியதான மிக மோசமான பிசாசு ஒரு பக்தியுள்ள பிசாசு தான். மற்ற எந்த அசுத்த ஆவிகளைக் காட்டிலும் அவைகள் ஐந்து மடங்கு மிகப் பயங்கரமானவை. 86. சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, நீ என்னுடைய சகோதரியாய் இருக்கிறாய். நீ ஒரு குற்றம் கண்டுபிடிக்கிறவளாய் இருக்கலாம்; தவறான ஏதோவொன்றை செய்யும்படியாக நீ அங்கே நின்று கொண்டிருக்கலாம். நீ என்னுடைய சகோதரி என்று எனக்கு எப்படி தெரிந்தது? நாத்தான்வேல் கபடற்ற உத்தம நீதிமானாயிருந்தான் என்று அவர் அறிந்து கொண்ட அதேவிதமாகத்தான் எனக்கும் தெரிந்தது. 87. நீ உனக்காக அங்கே நின்று கொண்டிருக்கவில்லை. நீ வேறு யாரோ ஒருவருக்காக அங்கே நின்று கொண்டிருக்கிறாய். அது உன் சகோதரி. அவள் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள். நீ உன்னுடைய கரத்தில் அந்த சிறிய காரியத்தை வைத்திருந்தாய். அந்தப் பெண்மணிக்கு புற்று நோய் உள்ளது. நீ ஜெபித்துக் கொண்டிருக்கிற அந்த உறவினர் யாரென்றால், உன் அத்தை, கர்த்தருக்குள் அவள் ஒரு சகோதரியே. நான் "சகோதரி" என்று கூறின போது, அது உன்னை திக்குமுக்காடச் செய்து விட்டது என்று எனக்குத் தெரியும். நான் உன் மனதை படித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அக்காரணத்தினால் தான் அவிசுவாசிகள், மத்தியில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நான் அறிகிறேன். 88. இப்பொழுது, விசுவாசித்தபடியே செல். சந்தேகப்படாதே. அவள் சுகமாகி விடுவாள். நீ சந்தேகப்படாமல் இருந்தால். இப்பொழுது தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஒரு காரியத்தையும் சந்தேகப்படாதே. அவரை உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தபடியே செல். 89. எப்படியிருக்கிறீர்கள்? ஐயா, நாம்-நாம் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதுதான் நாம் முதலாவது சந்திப்பதா? எனக்கு உங்களைத் தெரியாது, நான் உங்களைக் கண்டதேயில்லை. ஆனால் தேவனுக்கு உங்களைத் தெரியும். வெளியே சபையோரிடத்தில் இருக்கிற நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் கொண்டிருங்கள். 90. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சிறிய சீமாட்டி, அவர்கள் ஒருவிதத்தில் வயதானவர்கள், அவர்கள் தங்கள் தலையை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள் - அங்கே பின்னாலுள்ள வரிசையில் இரண்டாவது நபர். அந்த சைனஸ் தொல்லையிலிருந்து தேவன் உங்களை சுகப்படுத்தி, அவரால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, அவர் அப்போதே உங்களை சுகமாக்கி விட்டார். நீங்கள் ஏதோவொன்றை தொட்டீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அது கர்த்தராகிய இயேசுவாகும். 91. வாலிப சீமாட்டியே, நீ எதற்காக உன்னுடைய முகத்தில் உனது கைக்குட்டையை வைத்திருக்கிறாய்? நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? மஞ்சள் நிறமாகக் காணப்படும் சிறிய உடையை உடுத்தியுள்ள நீ தான். தேவன் ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் அவர் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? 92. நீயும் கூட உன்னுடைய கைக்குட்டையை மேலே வைத்திருக்கிறாய், இல்லையா, சீமாட்டியே? சரி, நீ உன்னுடைய தகப்பனாருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அந்த புற்று நோயிலிருந்து அவர் அவரை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? சரி. 93. சீமாட்டியே, நீ அவளுக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டு, உன்னுடைய கண்களையும் மற்றவைகளையும் துடைத்துக் கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய கணவனாருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அவர் இரட்சிக்கப்படவில்லை. அது ‘கர்த்தர் உரைக்கிறதாவது.’ நீ விசுவாசம் கொண்டவளாய் நம்பிக் கொண்டிருக்கிறாய். தேவன் அதை உனக்கு அருளுவார். 94. உமக்கு பிரகாசமான கண்கள் இருக்கின்றன, ஐயா. ஆனால் அவைகள் முழுவதுமாக சுகமாயிருக்கின்றன என்பதற்கு அது அர்த்தமல்ல. நான் உமது கண்களுக்காக ஜெபிக்கும்படி நீர் விரும்புகிறீர். அது உண்மை. அது மட்டுமல்ல, நான் வேறு யாரோ ஒருவருக்காகவும் ஜெபிக்கும்படி நீர் விரும்புகிறீர். அது உம்முடைய மனைவி. அவளுக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. நீர் புற்று நோயைக் குறித்தும் கூட பயந்து கொண்டிருக்கிறீர், இல்லையா? கவலைப்பட வேண்டாம். 95. நீர் இந்தப் பட்டணத்திலிருந்து வரவில்லை. நீர் ஒரு அருமையான நபராயிருக்கிறீர். நீர் நாக்ஸ்வில் (Knoxville) என்று அழைக்கப்படும் ஒரு பட்டணத்திலிருந்து வருகிறீர். நீர் ஒரு ஊழியக்காரராகவும் கூட இருக்கிறீர். அது உண்மை. உம்முடைய கடைசி பெயர் கலின் (Kline) என்பதாகும். உம்முடைய முதல் பெயர் டேவிட். நீர் சங்கை. டேவிட் கலின். நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீரென்றால், நீர் போய், கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்ளும்...?... ‘உம்மால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்.’ 96. இங்கே பின்னால் என்னுடைய வலது பக்கத்தில், இங்கே கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிற தடித்த சீமாட்டியே, நீங்கள் உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு கடினமாக ஜெபித்துக் கொண்டே அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் கூட தேவன் உங்களைத் தொட வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சிறுநீரகக் கோளாறிலிருந்து தேவன் உங்களை சுகப்படுத்தி நலமடையச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 97. உங்களிடம் இருக்கிற வேறொரு காரியத்தையும் கூட நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இருமுகிற ஏதோவொரு வகையான இருமல் உஙகளிடம் இருக்கிறது. அது ஆஸ்துமா. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், எழுந்து, சுகமடையுங்கள். 98. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் தேவனுக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு கோளாறு இருக்கிறது. நீங்கள் பித்தப்பை கல்லினால் அவதிப்படுகிறீர்கள். அது உண்மை. மேலும் நீங்கள் வேறு யாரோ ஒருவரால் வேதனை அனுபவிக்கிறீர்கள். அது ஒரு மனிதன், ஒரு சகோதரன். அது புற்று நோயாகும். பல தடவைகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது - சரியாக நான்கு முறை அறுவை சிகிச்சை செய்தும் பயனில்லை. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இந்த மேடையை விட்டுச் சென்று, கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்ளலாம். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 99. ஆம், நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், சிறிய பழுப்பு நிறமாகக் காணப்படும் தொப்பியை அணிந்து அங்கேயிருக்கிற சிறிய சீமாட்டியே, அந்த வயிற்றுக் கோளாறிலிருந்தும், கீல்வாதத்திலிருந்தும், தேவன் உங்களை சுகப்படுத்தி, நலமடையச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதுதான் அந்த சீமாட்டியா? ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, இங்கே ஒரு அவிசுவாச குவியல் இருந்து, அவையெல்லாம் என்னிடம் வந்தன... சீமாட்டியே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். 100. இயேசு, ‘கோதுமை களைகள் இரண்டையும் ஒன்றாக வளர விடுங்கள்’ என்று கூறினார் என்பது உங்களுக்குத் தெரியும். 101. இயேசு இன்றிரவும் ஜீவிக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்று நம்புகிறீர்களா? 102. இந்த சீமாட்டி எனக்கு ஒரு அந்நியளாயிருக்கிறாள். எனக்கு உன்னைத் தெரியாது, அப்படித்தானே, சகோதரியே? நாம் முற்றிலும் அந்நியர்களாயிருக்கிறோம். எனவே அங்கே வெளியே இருந்தவர்கள். இது அந்தப் பெண்மணி அல்ல. அது வந்து கொண்டிருக்கிற ஒரு பிள்ளையாகும். அங்கே வெளியே அந்த வரிசையின் கடைசியில் இருக்கிறவர், தேவன் சிறு பிள்ளைகளை சுகப்படுத்தினார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவனுடைய கேட்கும் திறன் மீண்டும் வந்து, அவனை சுகமாக்கி, அந்த செவிட்டு ஆவியை அவனை விட்டு எடுத்துப்போடுமென்றால், நீங்கள் தேவனுக்கு துதியை செலுத்துவீர்களா? இப்பொழுது அவனைத் திரும்ப அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 103. அங்கே மேலே சென்று, அவனுடைய காது பக்கமாகப் பேசிப் பாருங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 104. நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு நரம்பு சம்பந்தமான வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிறுநீர்ப்பை தான் அதற்குக் காரணம், அது தான் உங்களை கோபமூட்டுகிறது. அது உண்மை. அது தான் உண்மை, இல்லையா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 105. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் இந்த சீமாட்டியிடம் அதிகமாகப் பேசியிருக்கிறீர்கள்... அது அப்படியே... அது உங்களுக்கு என்ன செய்கிறது என்று உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். நான் அப்படியே ஏறக்குறைய விழுந்து விடும் நிலையில் இருக்கிறேன். எதனால் அது அப்படி சம்பவிக்கிறது? அது எப்படி? ஒரு நபர்... நேரத்தில், அவர் தாமே செய்ததைக் காட்டிலும் அதிகமாக நான் இங்கே நிற்க முடியும். அது என்ன? தேவன் தம்முடைய வரத்தை ஒருபோதும் உபயோகிக்கவில்லை. அந்த ஸ்திரீ தான் அதை உபயோகித்தாள். அவள் தேவனிடமிருந்து இழுத்துக் கொண்டாள். அவள் தனது விசுவாசத்தினால் இயேசு வழியாக அதை இழுத்துக் கொண்டாள். அவள் அவரைத் தொட்டாள். அவர், ‘நான்...’ என்று கூறினார். என்ன சம்பவித்தது என்று அவருக்குத் தெரியவில்லை. அது அதை உபயோகித்துக் கொண்டிருக்கிற நீங்களாக இருக்கிறது. 106. ஜனங்கள் சந்தேகப்பட்டு, ‘நல்லது, எனக்கு அது புரியவில்லை. நிச்சயமாக - அது இது, அது, மற்றதாக இருந்தாக வேண்டும்’ என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் இங்கே மேடையில் மாத்திரமே பார்க்கிறீர்கள். நீங்கள் காண்பதெல்லாம் இவ்வளவு தான். எங்கள் சொந்த ஊரில் (இடத்தில்) நடக்கும் கூட்டங்களில் அங்கே வெளியே எங்களோடு நீங்கள் இருந்ததில்லை. என்னுடைய மனைவி அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இதோ பையன்கள் இருக்கிறார்கள், இதோ எப்போதும் என்னாடு இருக்கும் ஊழியக்காரர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 107. இதற்கு முன்பு வாரக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக கூறுகிற காரியங்களைக் குறித்து எண்ணிப் பாருங்கள். அது தவறிப்போனதை எப்பொழுதாவது நீங்கள் கண்டிருக்கிறீர்களா, பையன்களே? அது அங்கே வெளியே பரிபூரணமாயிருக்கிறது. அந்தக் காரியங்கள் உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கே கூட இல்லை, ஆனால் வெளியிடங்களில், என்னை அறிந்த ஜனங்கள். பாருங்கள்? 108. அது வெறுமனே நீங்களாகத் தான் இருக்கிறது, இப்பொழுது, நீங்கள் தான் தேவனுடைய வரத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவருடைய வரமல்ல. அது கர்த்தருடைய தூதனானவராக இருக்கிறது. அதைப் பேசுவதற்கு அவர் வேறு ஒருவருடைய சத்தத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது. 109. இதை... கர்த்தர் அவளிடம் கூறியிருக்கிறார். சரி. அவர் கூறினது சரி தானா? அது கூறினது சரிதானா? இப்பொழுது, சீமாட்டியே, எனக்கு அது தெரியாது என்பது உனக்குத் தெரியும். இப்பொழுது நான் அதை அறியும் ஒரே வழி என்னவென்றால், அதை ஒலிநாடாவில் கேட்கும் போது தான். 110. ஆனால், நாம் அப்படியே கொஞ்சம் பேசுவோம். ஆமாம், அங்கே தான் அவளுடைய காரியம் இருக்கிறது. அது ஒரு சிறுநீர்ப்பை சார்ந்த வியாதி. அது மட்டுமல்ல, நீ-நீ ஒரு-ஒரு மகனைக் குறித்தும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது அவனுக்கு மூளையில் ஏற்பட்ட காயமாகும். அது உண்மை. அது மட்டுமல்ல, ஆனால் நீ ஜெபித்துக் கொண்டு வருகிற ஒரு சகோதரனும் உனக்குண்டு, அது புற்று நோயாகும். தேவன் ஒரு சுகமளிப்பவர் என்று நம்புகிறாயா? அப்படியானால் போகலாம், தேவனுடைய சமாதானம் உன்னோடு இருப்பதாக, தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ வேண்டிக் கொண்டதை அவர் உனக்கு அருளுவாராக. சரி. நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? இப்பொழுது, மிகவும் பயபக்தியாயிருங்கள். அங்கே வெளியே உள்ள சபையோரே, அப்படியே விசுவாசியுங்கள். விசுவாசம் கொண்டிருங்கள். 111. அங்கே நின்று கொண்டிருக்கிறவரே, உம்முடைய முதுகுப் பிரச்சனை உம்மை விட்டுப் போய் விட்டது என்று விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீரா? சரி. உம்முடைய வழியில் செல்லும். அப்படியே, ‘உமக்கு நன்றி, கர்த்தாவே’ என்று கூறும். 112. உங்களுடைய ஸ்திரீகளுக்குள்ள கோளாறு, பெண்களுக்குள்ள கோளாறு உங்களை விட்டுப் போய் விட்டது என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, களிகூர்ந்தவாறே, ‘தேவனாகிய கர்த்தாவே, உமக்கு நன்றி’ என்று கூறிக் கொண்டு, உங்கள் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். சரி. 113. சீமாட்டியே, இது உங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் ஒரு புற்று நோயினால் நிழலிடப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு - உங்களுக்கு அது தெரிந்திருக்கிறது. சரி, தேவன் உங்களை சுகமாக்கி விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போகலாம், அதனால் மீண்டும் உங்களுக்கு ஒருபோதும் தொல்லை ஏற்படாது. 114. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் நீண்ட காலமாகவே பதட்டமாக இருந்து வருகிறீர்கள். அது நீங்கள் ஏறக்குறைய நாற்பது வயதான பெண்ணாக இருந்த போது, ஆரம்பித்தது, அப்போது தான் உங்களின் ஜீவியத்தில் மாதவிடாய் (menopause) என்று அழைக்கப்படும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது முதற்கொண்டு இது வரையிலுமே, உங்களுக்கு அதிக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பொழுது, அந்த பிரச்சனையால் இங்கே வயிற்றில் ஒரு பிடிப்பு (spastic condition) ஏற்பட்டிருக்கிறது, அது தான் உங்களுக்கு ஒரு வயிற்றுக் கோளாறை உண்டாக்குகிறது. உங்களுடைய வயிற்றில் ஒரு வயிற்றுப் புண் ஏற்பட்டிருக்கிறது. அது உண்மை. 115. முப்பத்தைந்து வயதிற்கு முன்பு உங்களுக்கு என்ன சம்பவித்தது என்பதை தேவன் ஏன் அறிந்து கொண்டார்? எனக்கு அது தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு அது தெரியுமா, சீமாட்டியே? சரி, சென்று இப்பொழுதே சாப்பிடுங்கள். விசுவாசியுங்கள். நீங்கள் சுகமாகி விடுவீர்கள். 116. நான் வயிற்றுக் கோளாறைக் குறித்துக் கூறின போது, நீங்கள் உண்மையாகவே, ஒரு வினோதமாக உணர்வைக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? அங்கே... நல்லது, நீங்கள் அந்த நேரத்திலேயே சுகமடைந்து விட்டீர்கள். எனவே நீங்கள் அப்படியே உங்கள் வழியில் புறப்பட்டுச் செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். சரி. ஒவ்வொருவரும்... 117. அந்த ஆஸ்துமா நோய் உன்னை விட்டு போய் விடும் என்று விசுவாசிக்கிறாயா? அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, அப்படியானால், ‘உமக்கு நன்றி, கர்த்தராகிய இயேசுவே’ என்று கூறிக் கொண்டு உங்களுடைய பாதையில் புறப்பட்டுச் செல்லுங்கள். ஆசீர்வதிப்பாராக....?... 118. நான் உன்னைப் பார்த்து, ஒரு வார்த்தையும் கூறாமல் இருந்து, வெறுமனே நீ சுகமடைந்தாய் என்று கூறினால் என்னவாகும்? நீ அதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்வாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அப்படியே உன்னுடைய பாதையில் தொடர்ந்து செல். 119. நீங்கள் கல்வாரிக்குப் போவீர்களானால், நீங்கள் இன்சுலினை எடுக்க வேண்டியதில்லை. அவர் சர்க்கரை நோயையும் சுகமாக்குகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? களிகூர்ந்து கொண்டே உங்கள் பாதையில் செல்லுங்கள். ‘தேவனாகிய கர்த்தாவே, உமக்கு நன்றி’ என்று கூறுங்கள். 120. ஆமாம், நீங்கள் ஒரு காரியத்திற்காக உமக்கு ஒரு நீர்க்கட்டி இருக்கிறது, மேலும் கட்டியும் உள்ளது. அது உங்களுடைய பெண்மை சுரப்பிகளில் உள்ளது. தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் பாதையில் சென்று, களிகூருங்கள். சந்தோஷமாயிருங்கள். 121. நீங்கள் உங்கள் முழு இருதயங்களோடும் விசுவாசிக்கிறீர்களா? வேதவாக்கியம், ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்’ என்று கூறுகிறது. எத்தனை பேர் விசுவாசிகளாயிருக்கிறீர்கள்? இப்பொழுது, நீங்கள் ஒரு காரியம் செய்வீர்களா? உங்கள் கரங்களை அங்கே உங்களுக்கு அருகிலிருக்கிற யாரோ ஒருவரின் மேல் வையுங்கள், அங்கே உங்களைச் சுற்றியிருக்கிற யாரோ ஒருவரின் மேல் வையுங்கள். இந்த... நீங்கள் எல்லாருமே உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். 122. இப்பொழுது, நீங்கள் ஒரு மெதோடிஸ்டாக இருந்தால், நீங்கள் ஒரு மெதோடிஸ்டு சபையில் ஜெபிக்கிற விதமாக ஜெபியுங்கள். நீங்கள் பெந்தெகோஸ்தேகாரர்களாக இருந்தால், ஒரு பெந்தெகோஸ்தே சபையில் நீங்கள் ஜெபிக்கிற விதமாக ஜெபியுங்கள். நீங்கள் பாப்டிஸ்டாக இருந்தால், ஒரு பாப்டிஸ்டு சபையில் நீங்கள் ஜெபிக்கிற விதமாக ஜெபியுங்கள். நீங்கள் எந்த சபையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் அந்த நபரின் மேல் உங்கள் கரங்களை வைத்து அந்த நபருக்காக ஜெபியுங்கள். ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்.’ இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 123. நித்திய ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே, நாங்கள் எங்கள் தப்பிதங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது வியாதியஸ்தரை சுகமாக்குவதற்காகவும், பாவிகளை இரட்சிப்பதற்காகவும் இங்கே இருக்கிற, எங்கும் நிறைந்துள்ள உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள எங்கள் விசுவாசத்தை நாங்கள் அறிக்கை பண்ணிக் கொண்டிருக்கிறோம். 124. ஓ நித்திய தேவனே, இப்பொழுது அவிசுவாசிகள் தங்கள் தப்பிதங்களைக் காண்பார்களாக, பரிசுத்த ஆவியானவர் வந்து, வல்லமையைக் கொண்டு வந்து, குற்றத்தை அறிவுறுத்தி, அவர்களிடம் இரக்கத்தை அனுப்பி, கிறிஸ்துவின் இரட்சிப்பின் அறிவுக்குள் அவர்களைக் கொண்டு வருவாராக. 125. ஓ, சாத்தானே, வியாதியஸ்தரைக் கட்டிவைத்திருக்கிற நீ ஜனங்களை விட்டு வெளியே வா. நீ அம்பலப்படுத்தப்பட்டதால், நீ தோற்கடிக்கப்பட்டு விட்டாய். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, சட்டப்படியான எந்த உரிமையும் இல்லாத உன்னை பலர் அறியக் கூறுவதற்காக இன்றிரவும், என்றென்றும் ஜீவிக்கிறார். நீ கொண்டிருந்த எல்லாவற்றையும் கல்வாரியில், (எங்களுக்குப்) பதிலாக அவர் பட்ட அவருடைய மகத்தான பாடுகளினாலும், அவருடைய மரணத்தினாலும், அவருடைய வெற்றி சிறந்த உயிர்த்தெழுதலினாலும், கிறிஸ்து உன்னை விட்டு பறித்து விட்டார். அவர் இன்றிரவு இங்கே பிரத்தியட்சமாகியிருப்பது அவர் ஜீவிக்கிறவர் என்றும், அவர் எங்களை அபிஷேகித்தார் என்னும் உறுதியை உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறது. சாத்தானே, அவருடைய பிரசன்னம் இப்பொழுது இங்கேயிருக்கிறது, நீ இதற்கு மேலும் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா!